முல்லைத்தீவில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் விடுவிப்பு

மே 31, 2023

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் இதுவரை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை (மே 19) மேலும் சுமார் 08.178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பணிப்புரையின்படி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடீ விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களால், முல்லைத்தீவு 64 வது காலாட் படைப்பிரிவு பிரதேசங்களிலுள்ள அந்தக் காணிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு கருவலகண்டல் மற்றும் பாலம்பை பிரதேசங்களில் 8.178 ஏக்கர் காணிகளில் 14 வது இலங்கை சிங்கப் படையணி, 17 வது (தொ) கஜபா படையணி என்பவற்றின் குழுக்கள் முன்னர் நிலை நிறுத்தப்பட்டிருந்தன. இரண்டு படையணி குழுக்களும் இப்போது நிர்வாக நோக்கங்களுக்காக அந்தந்த படையலகின் தலைமையகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

போர் வீரர் நினைவு தினத்தன்று (மே 19), முல்லைத்தீவு வட்டார வன அலுவலகத்தில், அந்த 2 படையலகுகளுக்கும் உரிய ஆவணங்களை இரு படையணிகளின் கட்டளை அதிகாரிகளும் கையளித்தனர்.

நன்றி - www.army.lk