இராணுவப் போர்க்கருவி தொழிற்சாலையை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆராய்வு

மே 31, 2023
  • வெயங்கொடை இராணுவ போர்க்கருவி தொழிற்சாலைக்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்

இராணுவ போர்க்கருவி தொழிற்சாலை அதன் சொந்த தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிபுணத்துவத்தை உபயோகித்து இராணுவத்தின் தேவைகளில் கணிசமான வற்றை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் இராணுவம் பாரிய பங்களிப்பை வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் பாராட்டினார்.

இராணுவத்தின் முக்கிய சொத்தாக கருதப்படும் இந்த வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவ போர்க்கருவி தொழிற்சாலைக்கு (மே 30) விஜயம் மேற்கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெயங்கொடையில் உள்ள இராணுவ போர்க்கருவி தொழ்ற்சாலைக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை இலங்கை  இராணுவத்தின் போர்க்கருவி படையின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க வரவேற்றார்.

இதனை தோடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க மற்றும்  இராணுவ போர்க்கருவி தொழிற்சாலையின் கட்டளைத் அதிகாரி பிரிகேடியர் ஆனந்த ஜயரத்ன ஆகியோர் போர்க்கருவி தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் உற்பத்திகள் குறித்து விளக்கமளித்தனர்.

இலங்கை இராணுவ போர் சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் ஜீ.ஏ முனசிங்க மற்றும் மேற்படி நிலையத்தின் பொருப்பாளர் கேர்ணல் கே.எம். ஏ. டபிள்வு. கே பேரேரா  உட்பட இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.