கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கரப்பந்தாட்ட பயிற்சி

ஜூன் 01, 2023

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவத்தின் 57 ஆவது காலாட்படைப் பிரிவு கிளிநொச்சி பிரதேச மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்டப் பயிற்சிப் பட்டறையொன்றை நடத்தியது.

இலங்கை இராணுவ கரப்பந்தாட்டக் குழுவின் பயிற்றுவிப்பாளர்களின் தலைமையில் இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த செயலமர்வில் 150 மாணவர்களும் 12 பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் பங்குபற்றியதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

செயலமர்வின் நிறைவு நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.