இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

ஜூன் 06, 2023

புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அவிஹேய் சப்ரானி அவர்கள் இன்று (ஜூன் 05) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இச்சந்திப்பில், இலங்கையின் முப்படை வீரர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக ஜெனரல் குணரத்ன மற்றும் கேர்ணல் சப்ரானி ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர மற்றும் Glopack Company Limited இன் தலைவர் செவி ஜோசப் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.