சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட உளர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது
டிசம்பர் 14, 2020மன்னார் பள்ளிமுனை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1560 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மன்னாரை தளமாகக் கொண்டுள்ள 54 ஆவது படைப்பிரிவின் படைவீரர்கள் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
9.3 மில்லியன் ரூபா பெறுமதியான உலர்ந்த மஞ்சள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 5.34 மில்லியன் ரூபா பெறுமதியான 890 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் 15வது கெமுனு வாட்ச் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குஞ்சுக்குளம் வீதித் தடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சந்தேக நபர் இருவரும் மன்னாரில் இருந்து கல்முனை பிரதேசத்தை நோக்கி மஞ்சளினை லொரி ஒன்றினுள் வைத்து கடத்திச் செல்லும் வேளையில் கைது செய்யப்பட்டனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சள், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.