மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்ற மற்றும் இறந்த போர் வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் திருத்தப்பட்ட ஆயுதப் படைகளின் உணவு (ரேஷன்) கொடுப்பனவுகள் வழங்கப்படும்

ஜூன் 06, 2023

பயங்கரவாதச் செயல்களால் ஊனமடைந்து தற்போது மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் போரின் போது உயிரிழந்த போர் வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட ஆயுதப் படைகளின் உணவு கொடுப்பனவுகளை வழங்க தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் உரிய காலத்தில் அவர்களுக்காண கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

இந்த திருத்தப்பட்ட கொடுப்பனவை விரைவாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எனவே இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.