போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் நடத்தப்பட்ட கப்பல்களுக்கு அணுகல், தேடுதல் மற்றும் கைப்பற்றல் நுட்பங்கள் பற்றிய பிராந்திய பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஜூன் 10, 2023

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினால் திருகோணமலை, விசேட படகுகள் படையணி தலைமையகத்தில் மற்றும் சோபர் தீவில் நடத்தப்பட்ட கப்பல்களுக்கு நுழைவு, தேடுதல் மற்றும் கைப்பற்றும் நுட்பங்கள் தொடர்பான பிராந்திய பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் அதன் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு 2023 ஜூன் 09 ஆம் திகதி விசேட படகுகள் படையணியின் நிர்வாக அதிகாரி கமாண்டர் பிசிபிஏ லியனகே தலைமையில் திருகோணமலை மலிமா சோபர் தீவு உணவகத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் (UNODC-GMCP) உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் (UNODC-GMCP) கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பல்களுக்கு நுழைவு, தேடுதல் மற்றும் கைப்பற்றும் முறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான பாடநெறிகள் 2016 மே 04 ஆம் திகதி முதல் திருகோணமலை விசேட படகுகள் படையணித் தலைமையகத்தில் கடற்படையினரால் நடத்தப்படுகின்றது.

அதன்படி, 2023 மே 29 ஆம் திகதி தொடங்கப்பட்ட கப்பல்களுக்கு நுழைவு, தேடுதல் மற்றும் கைப்பற்றும் முறைகள் தொடர்பான பிராந்திய பயிற்சி நெறிக்காக இலங்கை கடற்படையின் ஆறு (06) அதிகாரிகள், இலங்கை கடலோர காவல்படை திணைக்களத்தின் இரண்டு (02) அதிகாரிகள் மற்றும் நான்கு மாலுமிகள் பங்களாதேஷ் கடலோரக் காவல் துறையின் இரண்டு (02) அதிகாரிகள் மற்றும் ஆறு (06) மாலுமிகள் கலந்து கொண்டனர்.

மேலும், போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் பயிற்சிக் குழுவின் பிரதம பயிற்சி ஆலோசகர் திரு.ஸ்டுவர்ட் மெல்வில் (Stuart Melville) அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

நன்றி - www.navy.lk