நாட்டிற்குள் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு

ஜூன் 12, 2023

வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

நாட்டில் தீவிரவாதம், வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும் தேசிய மூலோபாயத்தை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் கருப்பொருள் செயற்குழு (TWG) உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த செயலமர்வு முக்கியமாக நடத்தப்பட்டது.

இந்த செயலமர்வு, பேராசிரியர் ரஷீன் பாப்பு (மானுடவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு பேராசிரியர்), லெப்டினன்ட் கேர்ணல் ஆர்டி அன்சார், இலங்கைக்கான HELVETAS சுவிஸ்- இலங்கை இடையிலான கூட்டுறவு அமைப்பின் பணிப்பாளர் சுபாஷி திசாநாயக்க மற்றும் மேற்படி அமைப்பின் உயர் அதிகாரி ஹசந்தி கஹந்தவல ஆகியோரால் நடத்தப்பட்டது.

நிதி மற்றும் பொருளாதாரம், வெளிவிவகார அமைச்சுக்கள், தொழில்நுட்பம், கல்வி, பொதுப் பாதுகாப்பு, வெகுஜன ஊடகங்கள், சட்டமா அதிபர் திணைக்களம், INSS மற்றும் SL CERT ஆகிய அமைச்சுகள் உட்பட அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 பங்கேற்பாளர்கள் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் ஒரு நாள் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதமானது மனித உரிமைகள் மற்றும் தனிநபர்களின் அடிப்படை சுதந்திரத்தை மீறுகின்றன. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைந்து இலங்கை 2018 ஆம் ஆண்டு முதல் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும் தெற்காசிய வலையமைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போது இந்த வலையமைப்பின் உறுப்பு நாடுகளாக பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.