ஜின் கங்கையில் அடைப்பட்ட தடைகளை கடற்படையினர் அகற்றினர்

ஜூன் 14, 2023

பருவமழை காரணமாக பல நதிகள் மற்றும் நீரோடைகளின் நீரோட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் வெல்ல நீருடன் அடித்து வரப்படும் பெருமளவிலான குப்பைகள் பாலங்கள் மற்றும் குறுகிய இடங்களுக்கு கீழே அடைப்பட்டு ஆற்றின் சீரான நீரோட்டத்தை பாதிப்பதுடன் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

இலங்கை கடற்படை வீரர்கள் திங்கட்கிழமை (ஜூன் 12) காலி, பத்தேகம பகுதியில் ஜின் கங்கையின் தொடங்கொட மற்றும் அகலிய பாலத்தின் கீழ் அடைப்பட்டுக்கிடந்த தடைகளை அகற்றினர்.

கடற்படையின் சுழியோடிகள் மற்றும் விரைவு நடவடிக்கை படகு படையணியை சார்ந்த வீரர்கள் குழுவொன்றினால் இந்த நடவடிககைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.