பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது

ஜூன் 14, 2023
  • தேசிய கட்டிட ஆராயிச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேகாலை மாவட்டத்தில் தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை மற்றும் இதே மாவட்டத்தில் உள்ள எட்டியந்தோட்டைக்கு 2ஆம் நிலை எச்சரிக்கையிணையும் விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத, நிவிதிகல, கலவான, எஹலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் 2ஆம் நிலை எச்சரிக்கையும், கிரியெல்ல, அயகம, குறிவிட்ட மற்றும் பெல்மடுல்ல ஆகிய பகுதிகளுக்கு 2ஆம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சீதாவக பிரதேசத்திற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 1ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் லக்சகந்தவில் 135 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.