படை வீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கான நன்கொடை நிதியினை ரணவிரு சேவா அதிகாரசபை பெற்றுக்கொண்டது

டிசம்பர் 14, 2020

ரணவிரு சேவா அதிகார சபைக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)  நந்தன சேனாதீரவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய  ரணவிரு சேவா அதிகார சபைக்கு இந்த நிதி வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட போர் வீரர்களினது 208 பிள்ளைகள் நன்மையடைய உள்ளனர்.

தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் ஹுவாங், கொழும்பு சர்வதேச கொள்கலன் டெர்மினல்களின் நிர்வாக முகாமையாளர் கிராண்ட் யாங்க், கொழும்பு நிர்வாக குழுமங்களின்  குழு ஆலோசகர் மேஜர் ஜெனரல் சார்ஜி பி. கால்லகே, வரையறுக்கப்பட்ட ஹபக் லியோட் லங்கா நிறுவனத்தின் பிரதித் தலைவர் லலித் விதானாராச்சி, வரையறுக்கப்பட்ட கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திமிர கொடகும்புர சார்பாக டீ வி  அபேசிங்க ஆகிய நன்கொடையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.