இராணுவத்தினரால் நந்திக்கடல் பகுதியில் சதுப்புநில தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் முன்னெடுப்பு

ஜூன் 16, 2023

அண்மையில் ‘உலக சமுத்திர தினத்தை’ ஒட்டி முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள நந்திக்கடல் களப்பை அண்டியுள்ள சதுப்புநிலங்களில் இலங்கை இராணுவப் படையினரால் சதுப்பு நில தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் சனிக்கிழமை (10) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச மற்றும் சுற்றாடல் அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்களும் கலந்துகொண்டு சதுப்பு நில தாவரங்களை நட்டிவைத்தனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வசிக்கும் மீனவ சமூகத்தை சேர்ந்த 150 பொதுமக்கள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68வது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் இந்த திட்டத்திற்கு பங்களித்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.