இலங்கை விமானப்படையினரால் சீனாவில் தயாரிக்கப்பட்ட Y-12IV விமானம் கொள்முதல்

ஜூன் 19, 2023

இலங்கை விமானப்படைக்கு இரண்டு Y-12IV விமானங்களை கையகப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வமாக ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு சீன நாட்டின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. லியு சுவான் மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்றது.

இது தொடர்பான கொள்முதல் ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சீனாவின் தேசிய வானூர்தி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்திற்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீன நாட்டின் ஹர்பின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரி லிமிடெட்டினால் தயாரிக்கப்பட்ட Y-12IV விமானமானது இலங்கை விமானப்படையின் தேவையினை குறிப்பிடத்தக்க வகையில் பூர்த்தி செய்கிறது.

மேலும் இது இலங்கை விமானப்படையின் செயல்பாட்டுத் தயார்நிலைக்கும் மற்றும் பிராந்திய பாதுகாப்பை ஊக்குவித்தலிலும் அதிக பங்களிப்பை வழங்கும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.