விமானப்படையினரால் பாடசாலை மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்

ஜூன் 19, 2023

இலங்கை விமானப்படை அதன் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் இமதுவ பிரதேசத்திலுள்ள வதவன ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கான ஒரு குடிநீர் திட்டத்தை அண்மையில் கையளித்தது.

இத் திட்டமானது 'குவன் மிதுதம்' திட்டத்தின் 56 வது கட்டத்தின் கீழ் நீர் வழங்கல் அமைப்பு நிறுவப்பட்டு, இதன் மூலம் 126 பாடசாலை மாணவர்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

மேற்படி பாடசாலையில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது கொக்கல விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் திலின ராஜபக்ஷவினால் பூர்த்தி செய்யப்பட்ட குடிநீர் வசதி திட்டம் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.