மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து பதில்
பாதுகாப்பு அமைச்சர் ஆசி பெற்றார்

ஜூன் 20, 2023

பதில் பாதுகாப்பு அமைச்சர், கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் திங்கட்கிழமை (19) மாலை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த பதில் பாதுகாப்பு அமைச்சர் தென்னகோன் அங்கு வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்தார்.

அதனையடுத்து அஸ்கிரி கெடிகே ராஜமகா விகாரைக்கு வருகை தந்த பதில் பாதுகாப்பு அமைச்சர், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய வெண்டருவே ஸ்ரீ உபாலி தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நாயக்க தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர் தென்னக்கோன், அவரது நலம் விசாரித்ததுடன் அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்தார்.

அமைச்சரின் விஜயத்தின் போது மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்கள் அமைச்சருக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

அமைச்சர் தென்னகோன் தனது விஜயத்தின் போது கண்டி ஸ்ரீ சந்தானந்த பௌத்த கல்லூரிக்கும் விஜயம் செய்தார். இதன்போது, கல்லூரியின் அதிபர் வண. கலாநிதி கொடகம மங்கள தேரர் அமைச்சரை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.