இலங்கை பாதுகாப்பு படை குழு லெபனானில் ‘ஸ்டீல் ஸ்ரொம் I - 2023’ பயிற்சியில்

ஜூன் 21, 2023

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைப் பிரிவுகள் மற்றும் லெபனான் ஆயுதப் படைகள் ஆகியன இருவருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் ஸ்டீல் ஸ்ரொம் பயிற்சி I – 2023 லெபனானில் உள்ள சவுத் நகோரா முகாமின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி நிலையத்தில் ஜூன் 05-09 வரை ஐநா வழிகாட்டுதல்களுக்கு அமைய தீ ஆதரவு நடைமுறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைப் பிரிவுகள் பிரான்சின் படைத் தளபதியின் இருப்பு, இலங்கைப் பாதுகாப்பு படை குழு, இந்தோனேசியப் பாதுகாப்பு படை குழு, தான்சானியா இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கடல் பணிப் படைத் படையினருடன் இணைந்து சிறு ஆயுதங்களின் நேரடி துப்பாக்கிச் சூட்டு மற்றும் கவசப் பணியாளர் கேரியர் பொருத்தப்பட்ட இயந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சில் ஈடுப்பட்டன.

லெபனானில் பணியாற்றும் 14 வது இலங்கை பாதுகாப்பு படை குழு பிரதிநிதித்துவப்படுத்தி, பொறியியல் காலாட் படையணியின் மேஜர் எஸ்எம்என்எம் மானகே அவர்களின் தலைமையில் 07 இலங்கை அமைதி காக்கும் படையினரும் 04 விரைவு எதிர்வினைக் குழுவின் உறுப்பினர்களும், 02 எம்பீஎம்ஜி பல்நோக்கு இயந்திர துப்பாக்கிகளுடன் கலந்து கொண்டனர்.

நன்றி - www.army.lk