இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

ஜூன் 21, 2023

இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் கொதாரி கட்சுகி அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார். கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த திரு. கொதாரி அமைச்சர் தென்னகோன் அவர்களினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் இருதரப்பு பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதுள்ள நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.