பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான 'Dupu de Lôme' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜூன் 21, 2023

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான 'Dupu de Lôme' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று (ஜூன் 21) காலை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்கரை மரபுக் அமைய வரவேற்பளிக்கப்பட்டது.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 102.40மீட்டர் நீளமும், மொத்தம் 107 கடற்படையினரையும் கொண்ட இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் அகஸ்டின் பிளான்செட் தலைமை தாங்குகிறார் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) அன்று நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் பிரெஞ்சு குழுவினர் பல உள்ளூர் சுற்றுலா இடங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.