யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற குடும்பத்திற்கு இலங்கை
இராணுவத்தினால் புதிய வீடு அன்பளிப்பு

ஜூன் 21, 2023

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடைக்காடு பகுதியில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலங்கை இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு அண்மையில் (ஜூன் 18) பயனாளி குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் தகுதியான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 769வது வீடு இதுவாகும் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வத்திராயன், கடைக்காடு பகுதியைச் சேர்ந்த பயனாளியான எஸ்.ஜெஸ்லி ஜெயராஜ் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இராணுவத்தினரால் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.

புதிய வீடு கையளிக்கும் நிகழ்வில் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

12 (V) விஜயபாகு காலாட் படையணியின் படையினர் வீட்டின் நிர்மாணப் பணிகளுக்கு மிகவும் தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கினர்.