சர்வதேச யோகா தினம் - 2023

ஜூன் 21, 2023

யோகாவின் மூலம் கிடைக்கும் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை மேம்படுத்தவும் இது ஒரு தளமாக செயல்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச யோகா தினம் - 2023 நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இன்று (ஜூன் 21) இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.