பருத்தித்துறை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தில்
இராணுவப் படையினர் இணைந்தனர்

ஜூலை 03, 2023

இலங்கை இராணுவ (SLA) துருப்புக்கள் பருத்தித்துறை பிரதேச மக்களுடன் இணைந்து சத்கோட்டை மற்றும் ஊறணி கடற்கரைப் பகுதியை அண்மையில் சுத்தப்படுத்தினர்.

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது என  இலங்கை இராணுவ தகவல்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை நகர சபை ஊழியர்கள் மற்றும் கிராம அபிவிருத்திக் குழுக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருடன் பெருமளவிலான துறுப்பினரகள் இந்நிகழவுக்கு பங்கு கொண்டதாக  இராணுவ தகவல்கள் மேலும் தெரிவித்தன.