இராணுவத்தினரால் முல்லைத்தீவைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பு

ஜூலை 04, 2023

முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வின் போது தகுதியான குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேசத்தில் உள்ள பல நன்கொடையாளர்கள், மற்றும் நலன் விரும்பிகள் இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு பங்களித்தனர், அதே நேரத்தில் 6வது கெமுனு ஹேவா படையணி படையினர் தங்கள் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தை வழங்க முன்வந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் பயனாளியின் உறவினர்கள், இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.