ஆட்கடத்தல் தடுப்பு தொடர்பான முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வு வெற்றிகரமாக முடிவுற்றது

ஜூலை 06, 2023

முப்படை அதிகாரிகளுக்காக ஆட்கடத்தல் தடுப்பு தொடர்பான இரண்டு நாள் கொண்ட நிகழ்வு ஜூலை 04ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை கொழும்பு Movenpick ஹோட்டலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) உடன் இணைந்து இந்த நிகழ்வை  நடத்துவதற்கு இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) பாதுகாப்பு பிரிவு தலைவரான திருமதி மினோலி பி டொன் பங்களிப்பு அளித்தார்.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின்  அதிகாரிகளான திருமதி மைக்கல் பெர்மம் (சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆட்கடத்தல்), திரு. இம்தாத் (மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளர்) திரு. நிபுன விஜேசிங்க (திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆட்கடத்தல்) ஆகியோர் இதன்போது விரிவுரைகளை நடத்தினர்.

மேலும், கடல் மூலமான ஆட்கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி திரு. சுகத் அமரசிங்கவும் விரிவுரைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் தலைவரான பாதுகாப்புச் செயலாளரின் சார்பாக, தேசிய புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் நிறைவுரையாற்றிய தேசிய புலனாய்வுத் தலைவர், முப்படை அதிகாரிகளுக்கு ஆட்கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், பெற்றுக்கொண்ட  அறிவை சக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டு செயற்படுமாறு பயிற்சி நிகழ்வில் கலந்துகொண்டோரிடம் கேட்டுக்கொண்டார்.

நன்றி - www.nahttf.gov.lk