புதிய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

ஜூலை 06, 2023

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை மாரியாதை நிமித்தம் இன்று (ஜூலை 06) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் புதிய விமானப்படைத் தளபதியுடன் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

எயார் வைஸ் மார்ஷல் ராஜபக்ஷ ஜூன் 30 அன்று மூன்று நட்சத்திர தரத்திற்கு உயர்த்தப்பட்டதுடன், முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் சுதர்சன பத்திரன ஓய்வு பெற்றதை தொடர்ந்து 19வது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ராஜபக்ஷவுக்கு அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வை குறிக்கும் வகையில் இருவருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.