புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 07, 2023

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று  (ஜூலை 06) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிக்கு விஜயம் செய்த விமானப்படைத் தளபதியை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இந்நிகழ்வின் போது, புதிய விமானப்படைத் தளபதியின் நியமனம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் சுதர்சன பத்திரன ஓய்வு பெற்றதை தொடர்ந்து, எயார் வைஸ் மார்ஷல் ராஜபக்ஷ ஜூன் 30ஆம் திகதி மூன்று நட்சத்திர தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு 19வது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.