விபத்துக்குள்ளான பேருந்தின் மீட்பு பணிகளில் படையினர்
ஜூலை 10, 202312 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினர் நேற்று (9) மாலை 7.30 மணியளவில் கொட்டாலிய ஓயவில் விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
தகவலின் பேரில், அருகிலிருந்த விசேட படையணி பயிற்சி பாடசாலையின், 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 1 வது கொமாண்டோ படையணியின் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இத் திட்டம் இராணுவத் தளபதி மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலுக்கமைய 23 வது காலாட் படைபிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் கண்காணிப்பில் முழு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இவ் விபத்து பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று மனம்பிட்டிக்கு அருகில் கொட்டாலிய பாலத்தை கடந்து செல்லும் போது கொட்டாலிய ஓயாவில் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 6 வது கஜபா படையணியின் இராணுவ சிப்பாய் மற்றும் சிவில் ஊழியர் ஒருவரும் அடங்குகின்றனர்.
நன்றி - www.army.lk