இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க

ஜூலை 15, 2023

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க இன்று (ஜூலை15) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளருமான மேஜர் ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவின் மூத்த புதல்வரான மேஜர் ஜெனரல் வனசிங்க முன்னர் இராணுவத்தின் பிரதி பிரதம அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.