இலங்கை விமானப்படையினரால் இரணைமடுவில்
விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுப்பு

ஜூலை 17, 2023

இரணைமடு பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அண்மையில் கிளிநோச்சி கல்மடுநகர் ஆரம்பப் பாடசாலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் மற்றும் பிள்ளைகளுக்கான பாடசாலை சீருடைகள் இலங்கை விமானப்படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இரணைமடு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் சுலோச்சன மாரப்பெரும அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பார்ம்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. கிளாரன்ஸ் மெண்டிஸ் இந்த திட்டத்திற்கான அனுசரணையை வழங்கியதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன் நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் விமானப்படையினர் கலந்து கொண்டனர்.