யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அச்சுறுத்தல் தொடர்பான சிவில் விமானப் போக்குவரத்து அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கை சமர்பிப்பு

ஜூலை 19, 2023

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் (JIA)அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை சிவில் விமானப் போக்குவரத்து அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழு (CATAC) இன்று (ஜூலை 19) தேசிய புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தது.

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியின் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் நியமிக்கப்பட்ட குழு, முறையான மற்றும் விஞ்ஞான பாதுகாப்பு ஆய்வின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையினை சமர்பித்தது.

இந்த அறிக்கையானது விமான போக்குவரத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்க ஆணையம், பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் விசாரணை ஆகிய துறைகளில் நிபுணர்கள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலைமைகள் சர்வதேச தரத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தேவையான பரிந்துரைகளையும் பரிந்துரைப்பதற்கும் இக் குழு உத்தேசித்துள்ளது.