--> -->

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'SAMIDARE (DD-106) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

ஜூலை 20, 2023

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'SAMIDARE (DD-106) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (ஜூலை 20, 2023) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுப்படி வரவேற்றனர்.

இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘SAMIDARE (DD-106)’ என்ற Destroyer வகையின் கப்பல் 151 மீற்றர் நீளம் கொண்டதுடன் மொத்தம் 195 பேர் குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது குறித்த கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் OKUMURA Kenji மற்றும் கப்பலின் கொடி அதிகாரியாக, ரியர் அட்மிரல் NISHIYAMA Takahiro ஆகியோர் பணியாற்றிகின்றனர்.

‘SAMIDARE (DD-106)’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில் இக் கப்பலின் கடற்படையினர் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில் மற்றும் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், SAMIDARE (DD-106) என்ற கப்பல் 2023 ஜூலை 29 ஆம் திகதி தீவை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு மேற்குப் கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடற்படைப் பயிற்சியில் (PHOTOEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி - www.navy.lk