துருக்கி தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

ஜூலை 21, 2023

இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் அதிமேதகு டமெட் ஷெகர்ஜியளு, பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகைதந்த துருக்கி தூதுவரை அமைச்சர் வரவேற்றதுடன், முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இசந்திப்பின் போது இருதரப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பை நினைவுகூறுமுகமாக அமைச்சர் தென்னகோன் துருக்கி தூதுவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் - நடவடிக்கை ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.