சீனாவில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட் -2023’ துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவத்திற்கு ‘சிறந்த குழுப்பணி’ விருது
ஜூலை 24, 2023சீனாவின் உரும்கியில் சீன மக்கள் ஆயுதப் பொலிஸ் (PAP) படையின் பயிற்சி தளத்தில் ஜூலை 9-16 திகதிகளில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட்-2023’ சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவ துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு சிறந்த குழுப்பணிக்கான விருது வழங்கப்பட்டது.
பெலாரஸ், பாகிஸ்தான், குவைத், தென்னாபிரிக்கா, டொமினிகன் குடியரசு உள்ளிட்ட 18 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 துப்பாக்கி சுடும் வீரர்களுடன், இலங்கை இராணுவத்தின்கெமுணு ஹேவா படையணியின் மேஜர் ஆர்.எம்.டி.எம்.ரத்நாயக்கா மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் கெப்டன் ஆர்டிடீ பெரேரா ஆகியோர் கலந்து கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியானது புதிதாக இணைக்கப்பட்ட சவால் மிகு ஸ்னய்ப்பிங் போட்டியில் வெவ்வேறு அளவுகள் மற்றும் இலக்குகளின் வடிவங்களான அடையாளம் கண்டு 120 வினாடிகளுக்குள் ஐந்து தோட்டக்களை சுடதல் வேண்டும். இப் போட்டியில் இரு பங்கேற்பாளர்கள் நகரும் இலக்குகளை விரைவாக இணங்கண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் துல்லியமான துப்பாக்கி சுடுதல், நகரும்-இலக்குகளுக்கு துப்பாக்கி சுடுதல் மற்றும் நிலை-சுழற்சி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் 12 போட்டிகள் இடம்பெற்றன என இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.