எல்ல பகுதியில் ஏற்பட்ட தீயினை விமானப்படையினர் அணைத்தனர்

ஜூலை 24, 2023

கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பதுளை மாவட்டத்தின் எல்ல பகுதியில் நேற்று (ஜூலை 23) ஏற்பட்ட தீ இலங்கை விமானப்படை (SLAF) பெல் 212 உலங்குவானூர்தியின் மூலம் அணைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்காக விமானப்படை தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.