உடையார்கட்டு வறிய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணம்

ஜூலை 25, 2023

உடையர்கட்டு சுதத்திபுரம் காலனியில் வசிக்கும் கூலித்தொழிலாளியான திரு விஜயகுமார் தனுஷனின் குடும்பத்திற்கு இலங்கை இராணுவம் புதிய வீடொன்றை நிர்மாணித்து அதனை பயனாளியிடம் கையளித்தது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள 681வது காலாட் பிரிகேடின் 9வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினரால்  இந்த திட்டத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் நிபுணத்துவம் வழங்கப்பட்டதுடன், ஆனந்தபுரத்தில் திரு எஸ்.புனிதாவலன் மற்றும் வாலைமடத்தில் உள்ள திரு எம்.பி. ஆண்டன் ஆகியோர் நிதியுதவிகளை வழங்கியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன, அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.