விஷேட அதிரடிப் படைக்கு ஐ.நா. பணிகளுக்கான இராணுவத் தயாரிப்பு
வாகனங்கள் வழங்கல்
ஜூலை 26, 2023
இராணுவத்திற்கு ‘சாத்தியமில்லாதவை ஏதுமில்லை’ என்பதை நிருபிக்கும் வகையில் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் படையினர் நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பேரில் ஐ.நா பணிக்காக பயன்படுத்துவதற்கான இராணுவத்தினரினால் தயாரிக்கப்பட்ட 6 வாகனங்கள் விஷேட அதிரடி படையினருக்கு கையளிக்கப்பட்டன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் முன் முயற்சியால் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி இரண்டு புதிய கவசப் பணி கேரியர்களையும் மற்றும் நான்கு பொலிஸ் கூட்டு கட்டுப்பாட்டு வாகனங்களையும் விஷேட அதிரடிப் படைக்கு வழங்க 75 மில்லியன் என மதிப்பிடப்பட்ட 6 வாகனங்களையும், ரூ. 66 மில்லியன் ரூபாவில் தயாரித்தது. ஆறு வாகனங்களையும் பொலிஸ் மா அதிபர் சீடி விக்கிரமரத்ன மற்றும் விஷேட அதிரடிப் படையின் தளபதியும் பிரதிப் பொலிஸ் மா அதிபரான டபிள்யூ ஜயசுந்தர, ஆகியோரை இராணுவத் தலைமையகத்திற்கு வரவழைத்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
வாகனத்தின் திறப்பு மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களின் பிரதியை அன்றைய அழைப்பாளரான பொலிஸ் மா அதிபருக்கு கையளிக்கப்பட்டது.ஒவ்வொரு வாகனமும் நாட்டின் இறக்குமதி பெறுமதி ரூ. 200 மில்லியன் ஆகும், விஷேட அதிரடிப் படையின் ஐ.நா பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் புறப்படுவதற்கு முன் வாகனம் கையளிக்கப்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் பொலிஸ் மா அதிபர் சீடி விக்ரமரத்ன இணைந்து ஆறு வாகனங்களை உன்னிப்பாகப் பார்வையிட்டதுடன், மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் முன்னிலையில் அவற்றின் உற்பத்தி தொடர்பான சில கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கட்டுபெத்த மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் செசி இல்லாமல் எபீசி விலை ரூ. 16 மில்லியன் மற்றும் பீசீசீவீ ரூ. 8.5 மில்லியன் ஆகும். அந்த ஆறு வாகனங்களின் முழு உற்பத்திக்கும் நாட்டில் மதிப்பில் ரூ. 100 மில்லியன் ஆகும். இதன் படி நாட்டிற்கு 34 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதுடன், இந்த 6 வாகனங்களையும் உற்பத்தி செய்ய 66 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
1980 ஆம் ஆண்டு, எல்ரீரீஈ பயங்கரவாதத்திற்கு எதிரான 30 வருடகால யுத்தத்தின் போது இராணுவத்தினர் போர்க்களத்திற்கு பாதுகாப்பாக செல்வதற்காக தென்னாபிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட யுனிபப்பல் வாகனத்தை இராணுவம் இறக்குமதி செய்தது. இருப்பினும் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி 1984 - 2008 ஆண்டுகளில் யூனிகோர்ன் மார்க் II மற்றும் யூனிகோர்ன் மார்க் VI உள்ளிட்ட கவச வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கியது.
இதன் போது பொலிஸ் மா அதிபர், விஷேட அதிரடிப் படை தளபதியுடன் இணைந்து இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றினை வழங்கினார். அதற்கமைய இராணுவ தளபதியும் பதிலுக்கு நினைவு சின்னம் ஒன்றை வழங்கினார்.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாய கையளிப்பு நிகழ்வில் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு,பிரதிப் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ, இலங்கை இராணுவத் தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யுடபளியுவி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, வரவு செலவு மற்றும் நிதி முகாமைத்து பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யுபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்த்தனே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ வளங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி பல முக்கிய பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நன்றி - www.army.lk