இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
ஜூலை 30, 2023இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Khanjar’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூலை 29) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
இவ்வாறு திருகோணமலை துறைமுகம் வந்தடைந்த Missile Corvette வகையின் கப்பலான ‘INS Khanjar’ 91 மீற்றர் நீளமும், மொத்தம் 151 கடற்படையினர்களும் கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் NVS Phani Kumar செயல்பட்டு வருகிறார்.
மேலும், ‘INS Khanjar’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளது. மேலும், தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ‘INS Khanjar’ என்ற கப்பல் 2023 ஜூலை 31 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட உள்ளதுடன் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி - www.navy.lk