வத்தளை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி

ஆகஸ்ட் 01, 2023

வத்தளை, பள்ளிய வீதியிலுள்ள வீடொன்றில் இன்று (2023 ஆகஸ்ட் 01) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை கட்டுபடுத்தி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக கடற்படையினர் உதவி வழங்கினர்.

வத்தளை பள்ளிய வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படை தீயணைப்பு குழுவின் உதவியை வழங்குமாறு வத்தளை பொலிஸார் இன்று (01 ஆகஸ்ட் 2023) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் செயற்பாட்டு அறையிடம் உதவி கோரியுள்ளனர்.

இதன்படி, உடனடியாக அறிவித்தலை ஏற்றுக்கொண்ட கடற்படையினர், வத்தளை, பள்ளிய வீதி பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்காக, தீயணைப்பு வண்டி (01) மற்றும் நீர் பவுசர் (01) உடன் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட தீயணைப்பு குழுவை அனுப்பி வைத்தனர். அங்கு, கடற்படை தீயணைப்பு குழுவினர் அப் பகுதி மக்களின் உதவியுடன் வீட்டிற்குள் ஏற்பட்ட தீயை அணைத்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

மேலும், இதுபோன்ற எந்த அவசர நிலையிலும் பொதுமக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.

நன்றி - www.navy.lk