மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ
மற்றும் அணியினருக்கு நினைவஞ்சலி
ஆகஸ்ட் 04, 2023
மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவமற்றும் அவரது குழுவினரான மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜிஎச் ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கொமான்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கொமான்டர் சீபி விஜேபுர, மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்கிரமசிங்க ஆகியோருக்கு 31ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திம்பிரிகஸ்யாயவில் உள்ள புனித தெரேசா தேவாலயத்தில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 3) விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.
சமகாலத்தின் புகழ்பெற்ற போர் வீரர் 1992 ஓகஸ்ட் 8 அன்று யாழ். அராலி முனை வழியாக பயணித்த போது எல்ரீரீஈ இன் கண்ணிவெடியில் ஒன்பது அதிகாரிகள் மற்றும் ஒரு சிப்பாயுடன் தனது உயிரை நீத்தார். மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் துணைவியார் திருமதி லாலி கொப்பேகடுவ தலைமையில் அவரது குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேருரை, மறைந்த புகழ்பெற்ற இராணுவத் தலைவரின் தாய்நாட்டிற்கு ஆற்றிய விலைமதிப்பற்ற சேவையை நினைவு கூர்ந்தது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பீல், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பீல், மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் மறைந்த போர்வீரர் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
நன்றி -www.army.lk