இராணுவத்தினரால் யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில்
ஏற்பட்ட தீ விபத்து அணைக்கப்பட்டது

ஆகஸ்ட் 05, 2023

கிளிநோச்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 04) மாலை வேகமாகப் பரவி வந்த பெரும் காட்டுத்தீயை இலங்கை இராணுவத்தினர் அணைத்துள்ளனர்.

57வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 9வது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக விரைவாக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநோச்சி மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள உறுப்பினர்களின் உதவியுடன் நீர் பௌசர்கள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி படையினர் தீயை அணைத்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.