இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம்
திருகோணமலையில் விபத்துக்குள்ளானது

ஆகஸ்ட் 07, 2023

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று (ஆகஸ்ட் 8) திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது.

சீனக்குடா விமானத்தளத்தின் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டுச் சென்று சில நிமிடங்கள் கழிந்த நிலையில் அதே பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இதன்போது குறித்த விமானத்தில் பயணித்த இரு அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும் பொருட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விஷேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.