இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் மாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் புத்தகங்கள் அன்பளிப்பு

ஆகஸ்ட் 08, 2023

மாங்குளம் மகா வித்தியாலயம் மற்றும் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் றோயல் கல்லூரியின் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் நூலகப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57வது காலாட் படைப்பிரிவின் 573வது காலாட் பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி, கொழும்பு றோயல் கல்லூரி அதிபர் மற்றும் றோயல் கல்லூரியின் உரிய அதிகாரிகளுடன் இணைந்து மேற்படி நன்கொடைகளை ஒருங்கிணைத்தார் என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் 57வது காலாட் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பி.சி பீரிஸ், இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள்,சிப்பாய்கள்,மாணவர்கள் மற்றும் நன்கொடையாளர்களும் கலந்துகொண்டனர்.