இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் கந்தளாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

டிசம்பர் 15, 2020

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இலகரக பயிற்சி விமானம் கந்தளாய், சூரியபுர பிரதேசத்திலுள்ள வயல் காணியில் இன்று (15) விழுந்து  விபத்துக்குள்ளானது.

பிரி 6 ரக மேற்படி  இலகுரக விமானம் தனது வழமையான பயிற்சிக்காக சீனாக்குடாவிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்று சிறிது நேரத்தில் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின்போது குறித்த விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட விமானி இந்த விபத்தில் உயிரிழந்துள்ள தாக  இலங்கை விமானப்படை மேலும் உறுதி செய்துள்ளது.

இந்த விபத்தில் சிவிலியன்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும் தனியார் சொத்துகளுக்கு சிறிதளவு சேதங்கள்  ஏற்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கை விமானப்படை தனது குழுவினை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.