பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஆகஸ்ட் 16, 2023

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் இன்று (ஆகஸ்ட் 16) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் புதிய பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகருக்கு அன்பான வரவேற்பு அளித்ததுடன் அவருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, அவசர காலங்களின் போது இலங்கை தமது நாட்டுக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த கேர்ணல் பாரூக், தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் எதிர்வரும் பாதுகாப்பு மாநாடு தொடர்பிலும் கலந்துரையாடினார்.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளையும் இதன்போது நினைவு கூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், தற்போதுள்ள பரஸ்பர உறவுகளைத் மேலும் தொடர எதிர்பார்ப்பதாகவும் தனது புதிய பதவியில் சிறந்து செயல்பட பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்,

இந்நிகழ்வில் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.