கிழக்கில் இராணுவத்தினரால் முன்பள்ளி பாடசாலை புனரமைப்பு
ஆகஸ்ட் 18, 2023இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட கதிரவெளி, புதூரில் உள்ள முன்பள்ளி பாடசாலை ஒன்று இலங்கை இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேட் படையினரால் கதிரவெளி, புதூரில் உள்ள 'சரஸ்வதி' முன்பள்ளி பாடசாலை கட்டிடம் புனரமைக்கப்பட்டதாக இலங்கை இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி முன்பள்ளி பாடசாலையின் தளபாடங்கள், வகுப்பறைகள் மற்றும் ஏனைய வசதிகள் இராணுவத்தினரால் சீரமைத்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பள்ளி பாடசாலைக்கான புதிய சமையளறை ஒன்று அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் குழுவினால் வழங்கப்பட்ட நிதியுதவியைக் கொண்டு இந்த புனரமைப்பு திட்டமானது 3வது இராணுவ பொறியியல் சேவைகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட கட்டிடம் மற்றும் அதன் வசதிகளை கையளிக்கும் நிகழ்வின் போது முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் 23வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன, 233 காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகேசிஎஸ் டி சில்வா, இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.