ஹோமாகம தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ மேற்கு படையினர் அணைப்பு

ஆகஸ்ட் 18, 2023

வியாழக்கிழமை (ஓகஸ்ட் 17) மாலை ஹோமாகம நீர் பராமரிப்பு தொழில்நுட்ப இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை இராணுவத்தினர் தீயணைப்பு படையினரின் உதவியுடன் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில், 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ஒரு அதிகாரி, 5 களப் பொறியியல் படையணி, 14 வது வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி மற்றும் 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றின் 200 க்கும் மேற்பட்ட படையினரின் உதவியுடன் துரித நடவடிக்கையில்கோட்டை மற்றும் ஹொரண தீயணைப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் படையினர் தீயை அணைத்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதே நேரத்தில், தீயணைப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக, இராணுவம் ஒரு ஆம்புலன்ஸ், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திலிருந்து இரண்டு தண்ணீர் பவுசர்கள் மற்றும் 1 வது களப் பொறியியல் படையணியின் ஒரு ஜேசிபி ஆகியவற்றையும் பயன்படுத்தியது. இந்த வாகனங்கள் தண்ணீர் விநியோகம் செய்வதிலும், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு உதவுவதிலும் முக்கிய பங்கு வகித்தன.

மேலும், தீ பரவாமல் தடுக்க இரசாயன தொழிற்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தை குறைக்க தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து இராணுவ வீரர்கள் அயராது உழைத்தனர். அவர்களின் முயற்சிகள், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதை உறுதிசெய்தன.

இந்த பணியானது மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 142 காலாட் பிரிகேட் தளபதி மற்றும் அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது.

நன்றி- www.army.lk