சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 23, 2023

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஆகஸ்ட் 23) கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (CSD)  புதிய பணிப்பாளர் நாயகமாக ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட எயார் வைஸ் மார்ஷல் பியன்வில, அண்மையில் பதவியேற்றதைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக இராஜாங்க அமைச்சரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இராஜாங்க அமைச்சர் தென்னகோன், எயார் வைஸ் மார்ஷல் பியன்விலவின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.