இராணுவ மருத்துவமனையின் லெப்டினன் கேணல் (டாக்டர்) கே. சுதர்ஷன் அவர்களுக்கு அமெரிக்க விருது

ஆகஸ்ட் 25, 2023

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக நிறை கொண்ட சிறுநீரகக் கல்லை அகற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கொழும்பு இராணுவ மருத்துவமனையின் வைத்திய நிபுணர் லெப்டினன் கேணல் (டாக்டர்) குகதாஸ் சுதர்ஷன் அவர்கள் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) அமெரிக்க ஐக்கிய ஆராய்ச்சி பேரவையினால் அமெரிக்கவின் ஆண்டின் சிறந்த சிறுநீரக மருத்துவர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க விருதுகள் - 2023 இன் சர்வதேச திறமையான ஆளுமை விருதுகளைப் பெறுவதற்காக லெப்டினன் கேணல் (டாக்டர்) குகதாஸ் சுதர்ஷனைப் தனிப்பட்ட திறன்கள், சிறப்புகள், அனுபவம் மற்றும் அந்தந்தத் துறைகளில் தனி நபர்/ நிறுவனம்/ அமைப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் சாதனையாளராக கௌரவித்துள்ளது.

லெப்டினன் கேணல் (டாக்டர்) குகதாஸ் சுதர்ஷன் தற்போது கொழும்பு இராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான அறுவை சிகிச்சை மற்றும் நவீன சிகிச்சை முறையினை மேற்கொள்ளும் வைத்தியராவார். உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக நிறை கொண்ட சிறுநீரகக் கல்லை அறுவை சிகிச்சை மூலம் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் 2023 ஜூன் 1 வியாழன் அன்று நடாத்தி கின்னஸ் உலக சாதனையில் நுழைவதற்கு தகுதி பெற்றார்.

'அமெரிக்கன் விருதுகள்' அவரை ஆண்டின் மிகவும் ஊக்கமளிக்கும் சிறுநீரக மருத்துவர் விருதுக்கு பெயரிடும் போது, 'அத்தகைய சிறந்த ஆளுமைகளை சர்வதேச தரத்துடன் கௌரவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அந்த சாதனையாளர்களின் வெற்றியை உலகெங்கிலும் உள்ள மக்கள் அறிந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நன்றி - www.army.lk