இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 28, 2023

ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பதினாறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஆகஸ்ட் 28) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோரிக்கிடையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இருதரப்பு பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஜெனரல் குணரத்ன இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் தான் தங்கியிருந்த காலத்தின் நினைவுகளையும் இதன்போது நினைவு கூர்ந்தார்.

மேலும் ஜெனரல் குணரத்ன, 63வது இந்திய இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பாடநெறி அங்கத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்களுக்கு அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் புனித் சுசில் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் மூலோபாய சுற்றுப்புற ஆய்வுப் பயணத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரிகேடியர் ரஜத் குமார் மற்றும் கேர்ணல் உஷாகோவ் ருசியன் லியோனிடோவிச் ஆகியோரும் கலந்து கொண்டார்.