கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக
ரியர் அட்மிரல் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்

செப்டம்பர் 01, 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (செப்டம்பர் 01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை காலம் உபவேந்தராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே ரியர் அட்மிரல் தம்மிக்க குமார புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரியர் அட்மிரல் குமார, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பணியாற்றிய புகழ்பெற்ற கடற்படை அதிகாரி ஆவார்.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வின் போது உபவேந்தருக்கு   மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன், போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பல்கலைக்கழக பயிற்சி மைதானத்தில் பல்கலைக்கழக வர்ணங்களுடனான அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார்.