இராணுவத்தினரால் யாழ்பாண சாக்கோட்டை கடற்கரை சுத்தம்

செப்டம்பர் 04, 2023

யாழ்பாணம் பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் இராணுவப் படையினர் அண்மையில் யாழ்ப்பாணம் சாக்கோட் கடற்கரையை பாதுகாக்கும் நோக்கில் சுத்தப்படுத்தினர்.

52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட்படை படை பிரிவைச் சேர்ந்த 4 வது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையினர், அப்பகுதியிலுள்ள ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுப்பதாக இராணுவ தகவல்கள் தெரிவித்தன.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை இராணுவத்திற்கு பருத்தித்துறை பொலிஸ் மற்றும் பிரதேச சபை உதவியதாக இராணுவ தகவல்கள் மேலும் தெரிவித்தன.